Friday, January 9, 2009

முயன்று பாருங்கள்.
இன்ரநெட் எக்ஷ்புளோரரில் ஒரு சட்டத்தை திறக்கும்போது திரை நடுவில் சிறியதாகத்தான் எப்போதும் திறக்கும். இதை தடுத்து எப்போதும் பெரிய அளவில் திறக்குமாறு செய்துவிட்டால் எமக்கு சிரமம் குறையும். இதை எப்படி செய்யலாம்?
இதற்கு பல வழிகள் உள்ளன.

1) சிறிய திரையின் பக்கங்களை மொளசால் முடியுமான அளவிற்கு பெரியதாக இழுத்துவிடுஙகள். பின் File, Close ஐ கிளிக்பண்ணவும். F5 கீயை அழுத்தவும். மீண்டும் அதே லிஙை கிளிக்பண்ணினால் சட்டம் பெரிதாகவே திறக்கும்.

2) சிறிய திரையை மொளசால் Restore பட்டனை கிளிக்பண்ணி பெருப்பிக்கவும். பின் Ctrl பட்டனை அழுத்திப்பிடித்திக்கொண்டு, Close பட்டனை (X) அழுத்தி மூடிவிடவும்.

3) Ctrl+Shift+Alt ஆகிய மூன்று பட்டன்களையும் ஒன்று சேர அழுத்தி பிடித்துக்கொண்டு, மொளசால் நான்கு பக்கங்களையும் திரை முழுவதும் நிரம்பும் வகையில், முடிந்தளவு பெருப்பிக்கவும். அழுத்திபிடித்தபடியே மூலையில் உள்ள Close பட்டனை கிளிக்பண்ணி மூடிவிடவும்.

இதில் ஏதாவது ஒரு வழியில் முயன்று பாருங்கள்.

No comments:

Post a Comment